அண்ணா அறிவாலயம் வரும் கருணாநிதி... ஆர்கே நகரும் செல்வாரா ?- வீடியோ

2017-12-12 3,991

ஓராண்டுக்குப் பின்னர் திமுக தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயம் வருகை தர இருக்கிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு தருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் ஆர்.கே.நகர் தொகுதி பிரசார மேடைகளில் கருணாநிதியை அமர வைப்பதற்கான சூழல்கள் குறித்தும் விவாதிக்கப்படுகின்றன. அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு ஜெயலலிதா சென்றால் செய்தி; அறிவாலயத்துக்கு கருணாநிதி வரவில்லையென்றால் செய்தி எனக் கூறும் அளவுக்கு அறிவாலயத்தில் கருணாநிதி கால்பதிக்காத நாட்களே இருந்தது இல்லை.

உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அதே நாட்களில் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கருணாநிதி. அதற்கு முன்னதாக அவரது உடலில் ஏற்பட்ட கொப்புளங்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். திடீரென மூச்சுத் திணறல் அதிகமானதால் காவேரியில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறலை சரிசெய்வதற்காக அவரது தொண்டையில் இடப்பட்ட ட்ரக்கியோஸ்டமி குழாய்கள் இன்னும் நீக்கப்படவில்லை.

Sources said that DMK President Karunanidhi will visit Party Headquarters Anna Arivalayam very soon

Videos similaires