ஆர்.கே.நகர் இடைத் தேர்தல், ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் தீர்ப்பு இவற்றைத் தொடர்ந்து திமுகவில் மிகப் பெரும் களையெடுப்பு நடக்க இருக்கிறதாம்.. இதனால் மாவட்ட செயலாளர்கள் பலரும் 'பிடிக்க வேண்டியவர்களை பிடித்து' 'நடக்க வேண்டியதை' பார்த்த் கொண்டிருக்கிறார்களாம். திமுக தலைவர் கருணாநிதி தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அக்கட்சியின் செயல்பாடு என்பது பத்தோடு பதினொன்றாகத்தான் இருக்கிறது. அறிக்கைகள், பேட்டிகள், அவ்வப்போது ஆர்ப்பாட்டம், பேரணி என்கிற வகையில்தான் ஒரு கட்சியாக மட்டுமே திமுக இயங்குகிறது.
ஜெயலலிதா இல்லாத நிலையில், அதிமுக இரண்டாக பிளவுபட்ட சூழலில், அக்கட்சியின் இரட்டை இலை சின்னமே இல்லாது இருந்ததை என எத்தனையோ அம்சங்களை தமக்கு சாதகமாக்க திமுக தவறிவிட்டது என்பதுதான் அக்கட்சி தொண்டர்களின் குமுறல். இது பொதுமக்களின் குமுறலும் கூட என்பதை திமுக செயல் தலைவர் ஸ்டாலினே பல கூட்டங்களில் பதிவு செய்திருக்கிறார்.
இருந்தாலும் கூட பெரிய அளவுக்கு திமுக ஆக்டிவ்வாக இல்லை என்பதுதான் யதார்த்தம். இந்த நிலையில் திமுகவின் 2-ம் கட்ட தலைவர்களாக இருப்பவர்கள் பலரும் தொழிலதிபர்களாக, கல்வி வள்ளல்களாக, வழக்குகளில் சிக்கியவர்களாக இருப்பதால் மத்தியில் ஆளும் பாஜகவுடன் கட்சி தலைமையை இணக்கமாக்குவதிலும் தீவிரமாக உள்ளனர்.
Sources said that the DMK Working President MK Stalin is preparing to change the party District secretaries.