புறநகர் பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சென்னையில் கடும் பனி மூட்டம் காரணமாக ஜி.எஸ்.டி சாலை உள்ளிட்ட சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். பனிமூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் விடிந்த பின்னரும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி செல்கின்றனர். கடும் பனிமூட்டத்தால் சென்னையில் தரையிறங்க முடியாமல் சில விமானங்கள் பெங்களூரு திருப்பி விடப்பட்டன. லண்டனிலிருந்து சென்னை வரும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 12 விமானங்களின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
#Mudichur #Chennaifog "விடிந்தது கூட தெரியாமல் வெண் பனியை போத்தி கொண்டு உறங்கும் அழகிய காலை பொழுது.."
கடும் பனிமூட்டத்தால் நிலவை போன்று தெரியும் சூரியன்...
வழக்கத்திற்கு மாறாக... கடும் பனிமூட்டத்தால் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கம்.. கடந்த ஒருமணி நேரமாக..
கடும் பனிமூட்டம்... சென்னையில் ரோட்டையே பார்க்க முடியவில்லை...
என்னடா இது போக போக விசிபிலிட்டி இன்னும் கம்மியாகிட்டே போகுது ? வண்டி ஓட்டிட்டு போறவங்களே பாத்துப் போங்கப்பா
Neitizens Sharing their views on Social media about Chennai fog. Heavy fog in Chennai and sub urban areas.