2023ல் 50 ஓவர் உலகக் கோப்பை இந்தியாவில் நடக்கும்... ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த பிசிசிஐ!- வீடியோ

2017-12-11 2,247

2023ல் நடக்கும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியா நடத்தும் என்று பிசிசிஐ அறிவித்து இருக்கிறது. இன்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. டெல்லியில் நீண்ட நாட்களுக்குப் பின் இன்று பிசிசிஐ கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இந்திய அணி அடுத்து விளையாடும் போட்டிகளை குறித்தும் தொடர்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் தற்போது இந்திய அணியில் வீரர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு நடந்த பிசிசிஐ கூட்டத்தில் வீரர்களின் சம்பள உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த பிசிசிஐ கூட்டத்தில் வித்தியாசமான முடிவு ஒன்று எடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி 2019-2020க்கு இடையில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் நாட்டில் டெஸ்ட் தொடர் விளையாட செல்லும் என்று கூறப்பட்டு இருக்கிறது. கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா முதல்முறையாக ஆப்கானிஸ்தான் அணியுடன் டெஸ்ட் போட்டி விளையாட போகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டை முன்னேற்றும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த கூட்டத்தில் 2021ல் நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை இந்திய அணியே நடத்தும் என்று முடிவாகியுள்ளது. 2006ல் கடைசியாக இந்தியா சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அப்போது இலங்கை அணியுடன் இந்தியா சாம்பியன் கோப்பையை இணைந்து வழங்கியது

The Board of Control for Cricket in India (BCCI) on Monday met in New Delhi for its Special General Body meeting to decide on a slew of important on field and off field matters.India will host the 2023 ICC 50-over World Cup. Last time India hosted it was in 2011 and they emerged winners under MS Dhoni defeating Sri Lanka.

Videos similaires