திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!- வீடியோ

2017-12-11 6

சன்டிவியில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா தொடரில் வில்லியாக நடிக்கும் லேகாவிற்கு திருக்குறள் என்றால் என்ன என்று தெரியவில்லை. அதை விட அவர்... யு டெல் மீ... முதல்ல எனக்கு மீனிங் சொல்லுங்க என்று கேட்கிறார். அதற்கு தொகுப்பாளர் ஆதவன் கொடுத்த விளக்கம் அதை விட கொடுமை. பத்தாண்டுகளுக்கு முன் வெளியான ஒரு தமிழ் படத்தில் டிவி தொகுப்பாளினிகளை கிண்டல் செய்திருப்பார் நடிகர் விவேக். அதேபோலத்தான் இப்போது சீரியல் நடிகைகளின் பேச்சும் நடவடிக்கையும் அமைந்துள்ளது. ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கும் சீரியல் நடிகைகளின் பேச்சும், செயல்பாடுகளும் தமிழ் மொழியையும், தமிழ் அறிஞர்களையும் கேவலப்படுத்துவது போலவே அமைந்துள்ளது.

சன்டிவியில் ஞாயிறு தோறும் சவாலே சமாளி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். கடந்த 3ஆம் தேதி ஒளிபரப்பான சவாலே சமாளி நிகழ்ச்சியில் சந்திரலேகா சீரியல் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

சந்திரலேகாவில் வில்லியாக நடிக்கும் லேகாவின் செயல்பாடுகள் கொடூரமானவை. தமிழ் பேச வராத நடிகை... தமிழே தெரியாத நடிகை என்பதால் டப்பிங்கில் சமாளித்து விடுகின்றனர். ஆனால் ரியாலிட்டி ஷோக்களில் அவர்களின் பேச்சை கேட்கும் போது அடேய்... ஏன் இந்த கொலைவெறி என்றாகிவிடுகிறது.


Chandraleka serial actress Lekha asks meaning of Tirukural in TV reality show.In Sun TV Show a serial actress said that she has no idea about Thirukural. See the video.

Videos similaires