பாண்டவர் அணிக்கு என்னதான் ஆச்சு.?-சூளும் பிரச்னைகளும்,விஷாலுக்கு வலுக்கும் எதிர்ப்புகளும்!- வீடியோ

2017-12-11 1


நடிகர் விஷால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தது திரையுலகினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. விஷாலுக்கு எதிராக நடிகர் சேரன், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவி வகித்துக்கொண்டு தேர்தலில் நிற்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். தயாரிப்பாளர் சங்கத்தை தொடர்ந்து நடிகர் சங்கத்திலும் நடிகர் விஷாலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகத் தெரிகிறது. துணைத் தலைவராக இருக்கும் பொன்வண்ணன் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தலில், சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட முந்தைய நடிகர் சங்க நிர்வாகிகள் செய்த முறைகேடுகளை முன் வைத்து தேர்தல் களத்தில் இறங்கிய நாசர், விஷால், பொன்வண்ணன் தலைமையிலான பாண்டவர் அணி அமோக வெற்றி பெற்றது.
விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் வெற்றிபெற்று பதவியேற்றுக் கொண்டனர். அதோடு அவர்கள் கொடுத்த முக்கிய வாக்குறுதியான நடிகர் சங்கத்தின் கட்டடம் கட்டும் பணியும் விரைவாக நடந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கும் பொன்வண்ணன், தான் ராஜினாமா செய்வதாக நடிகர் சங்கத்திற்கு கடிதம் கொடுத்திருக்கிறார். தனிப்பட்ட காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

Actor Vishal filed a nomination to contest in the RK Nagar by election, resulting in heavy dissatisfaction among the filmmakers. Actor Cheran made a protest against vishal. Vishal was opposed by the Nadigar sangam following the producer's council. Actor Ponvannan has resigned from the Vice president post in Nadigar sangam.

Videos similaires