450 பேர்களையே சமாளிக்க தைரியமும், விளக்கம் கொடுக்க பொறுமையும் இல்லாமல் எஸ்கேப் ஆக தேசிய கீதம் பாடிய ஒரே தலைவன் விசால் தான்.. இதைவிட கரும்புள்ளி இனி ஏது என இயக்குனர் சேரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது சேரன் தரப்பினருக்கும், விஷால் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டம் பாதியிலேயே முடிந்தது. இது குறித்து சேரன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நான் இன்று தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் பேசவே இல்லை.. விசாலை கேள்வி கேட்டவர் எல்லாம் அவருக்கு வாக்களித்து ஏமாந்துநிற்கும் தயாரிப்பாளர்கள்
450 பேர்களையே சமாளிக்க தைரியமும், விளக்கம் கொடுக்க பொறுமையும் இல்லாமல் எஸ்கேப் ஆக தேசிய கீதம் பாடிய ஒரே தலைவன் விசால் தான்.. இதைவிட கரும்புள்ளி இனி ஏது
இந்த மதிப்பு சமூகம் தந்தது.. அந்த மதிப்பை வைத்து சமூக மாற்றத்திற்கு அரசியல் ப்ரவேசம் இல்லாமல் முயல்வது தவறில்லை என தனக்கு அறிவுரை வழங்கியவருக்கு பதில் அளித்துள்ளார் சேரன்.
விசால் விசயத்தை இதோடுமுடிக்கலாம் இங்கு நண்பர்கள் யாரும் அதைப்பற்றி விவாதிக்கவேண்டாம்.எனது அன்புவேண்டுகோள். அடுத்து தவறுசெய்யும்போது பேசுவோம்
Director Cheran has slammed actor Vishal for running away from the TFPC general body meeting by singing national anthem in the middle of the meet.