டோணி விளையாடியதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.. ரோஹித் சர்மா அதிரடி பேட்டி- வீடியோ

2017-12-11 30,939


இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி இமாச்சல்பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நடந்தது. இந்த போட்டியில் இலங்கையிடம் இந்திய தோல்வியடைந்தது. தற்போது இந்த தோல்வி குறித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி அளித்துள்ளார். மேலும் அவர் டோணியின் ஆட்டம் குறித்தும் வித்தியாசமான கருத்து ஒன்றை கூறியுள்ளார். மேலும் தன்னுடைய கேப்டன்ஷிப் குறித்தும் அவர் அந்த பேட்டியில் சில முக்கியமான விஷயங்களை கூறியுள்ளார். கோஹ்லி இல்லாமல் விளையாடுவது கடினமாக இருக்கிறது என்றும் வருத்தப்பட்டார்.

நேற்று இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முதல் ஒருநாள் போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 112 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி 20.4 ஓவரில் இந்தியாவின் 113 ரன்கள் இலக்கை எளிதாக அடைந்தது. மேலும் இலங்கை அணி தொடரிலும் 1-0 என்று கணக்கில் முன்னிலை வைக்கிறது. தற்போது இந்த தோல்வி குறித்து ரோஹித் சர்மா பேசியுள்ளார்.

Rohith Sharma talks about India's one day loss against Sri Lanka. He says the that 'We were not up to the mark with the bat. Dhoni batting is amazing and he didn't surprised me, he would play like this always'' and he also talked about his captaincy.

Videos similaires