இலை அவங்க கிட்ட இருந்துட்டுப் போகட்டும்... ஆனால் பொதுச் செயலாளர் சசிகலாதான்.. நடராஜன் அதிரடி- வீடியோ

2017-12-11 6,134

அதிமுகவின் பொதுச்செயலாளர் என்றுமே சசிகலா தான் என்பது மக்கள் முடிவு செய்தது என்று புதிய பார்வை இதழின் ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான நடராஜன் கூறியுள்ளார். புதிய பார்வை இதழின் ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான ம. நடராஜன் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தனியார் பண்பலை ஒன்றின் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சி ஞாயிறன்று ஒலிபரப்பாகியுள்ளது. பேட்டியில் அவர் கூறியதாவது :

ஆர்கே நகர் தேர்தல் களத்தை நான் பார்க்கவில்லை, ஆனால் பொதுவாகவே மக்கள் ஆட்சியாளர்கள் வரவேண்டும் என்று தான் விரும்புவார்கள். யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பிரச்சாரம் செய்யலாம் ஆனால் மக்கள் ஆளும் கட்சிக்கு வாக்காளித்தாலே நல்லது நடக்கும் என்று நினைப்பார்கள். மக்கள் ஆளும் கட்சியை ஆதரிப்பார்கள் என்பது என்னுடைய அனுமானம், ஆனால் அவர்களுக்கு வெற்றியா என்பது தேர்தல் முடிந்த பிறகு தான் தெரியும்.

எம்ஜிஆருக்குப் பிறகு கஷ்டப்பட்டு இரட்டை இலை சின்னத்தை பெற்றெடுத்தது நாங்கள் தான். எந்த கஷ்டத்தையும் அனுபவிக்காதவர்கள் இன்று நான் தான் எல்லாம் என்கிறார்கள். நான் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு சவால் விடுக்கிறேன். எந்த மேடையிலும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்,

Sasikala's husband M. Natarajan speaks to FM's special interview and says that whatever will happen Sasikala is the general secretary for ADMK and this is what peoples wish too he added.

Videos similaires