திருமாவளவன் தலைக்கு ஒரு கோடி ரூபாய் அறிவித்த கோபிநாத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இந்து கோவில்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது புகார் எழுந்தது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திருமாவளவனின் தலையை கொண்டுவருபவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும் என இந்து முன்னேற்றக் கழக நிர்வாகி கோபிநாத் அறிவித்தார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் தலையை துண்டிப்பவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசை அறிவித்தார் இந்து முன்னேற்றக் கழக நிர்வாகி கோபிநாத். திருப்பூரைச் சேர்ந்த இவர் மீது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலர் தமிழ்வேந்தன் அளித்த புகாரின் பேரில், நேற்று காவல்துறையினர் கோபிநாத்தைக் கைது செய்து, 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். கோபிநாத், அவரைச் சார்ந்தோருடன், "இந்துக் கோயில்களை இடிக்க வேண்டும்" என்று திருமாவளவன் பேசியதாக, அவரது உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். அந்த ஆர்ப்பாட்டத்தின்போதுதான், திருமாவளவன் தலையைத் துண்டிக்குமாறு கட்டளை பிறப்பித்தார்.
TVK party leader Velmurugan urges TN police to arrest Gopinath in Gundas. Gopinath arrested after gives life threaten to Thirumavalavan.