இல்லற வாழ்க்கை சிறக்க உங்க மனைவிகிட்ட இப்படி எல்லாம் நடந்துக்கோங்க!- வீடியோ

2017-12-09 11

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் என்று தனியாக ஒன்று இருக்கும். திருமணமான பிறகு அதிகரிக்கும். ஒரு நல்ல இன்பமான கனவு வாழ்க்கை அமைய ஒவ்வொருவரும் தங்களது துணையிடம் இருந்து எதிர்பார்ப்பது புரிதலும், இணக்கமும் தான். இது கணவன் மனைவி இருவரிடம் இருந்து வர வேண்டும்.

ஏனென்றால் திருமணம் உறவில் கணவன் மனைவி என இருவரது பங்களிப்பும் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த கணவன் மனைவி உறவில் ஒரு சில விஷயங்களை பற்றி பேசுவதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். மற்ற உறவுகளிடம் ஒரு விஷயத்தை சாதாரணமாக சொல்வதற்கும் கணவன் மனைவிகள் அதை பற்றி பகிர்வதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. அதைப்பற்றி இந்த பகுதியில் காணலாம்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரோல் மாடல்கள் மற்றும் பிடித்த நபர்கள் இருப்பார்கள். அதற்காக உங்களது மனைவியை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். எனது அம்மா வேலைகளை இப்படி செய்வார்.. நன்றாக சமைப்பார் என்று உங்களது அம்மாவிடம் கூட உங்களது மனைவியை ஒப்பிட்டு பேசாதீர்கள். அதே போல தான் மனைவிகளும் தங்களது கணவரை தனது கணவன் அல்லது தந்தையுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது. கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவருடைய தனிப்பட்ட நல்ல குணங்களை அடிக்கடி புகழ்ந்து பேச வேண்டும்.

கணவன் மனைவி உறவில் முக்கியமான பிரச்சனையாக இருப்பது பணம் தான். எனவே திருமணத்திற்கு முன்னரே ஒருவருக்கொருவர் தங்களது நிதி நிலையை பற்றி தெளிவாக பகிர்ந்து கொள்ள வேண்டும். என்னால் இதை தான் செய்ய முடியும். இது எல்லாம் என் தகுதிக்கு அப்பாற்பட்டவை என்பது போன்ற விஷயங்களை சொல்லிவிட வேண்டும். இருப்பதை வைத்து சிறப்பாக வாழ்வதே கணவன் மனைவி உறவிற்கு சிறந்த அடையாளமாகும்.

உங்களுக்கு உங்களது உறவின் மீது மரியாதை இருக்க வேண்டியது அவசியம். கணவனோ மனைவியோ இருவருமே சரிசமமாக நடந்து இருக்க வேண்டும். அனைத்து விஷயத்திலும் ஒருவரது கை மட்டுமே ஓங்கியிருப்பது அன்பான கணவன் மனைவி வாழ்க்கைக்கு சிறப்பல்ல...

Follow these Ten Rules for happy marriage life

Videos similaires