நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்தால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ரத்து செய்யும் நிலைமைக்கு மீண்டும் ஒருமுறை தேர்தல் ஆணையம் தள்ளப்படும் என்ற தோற்றம் உருவாகியுள்ளது, என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஏப்ரலில் பணப்பட்டு்வாடா புகாரால் ரத்தான ஆர்.கே.நகரில் மீண்டும் டிசம்பர் 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேட்புமனு தாக்கல் ஆரம்பம் முதலே குழப்பமும், கொந்தளிப்பும்தான் மிஞ்சியுள்ளது. குழப்பங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது நடிகர் விஷாலும், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவும்.
விஷால் மற்றும் தீபா ஆகிய இரு சுயேட்சைகள் மனுவையும் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துவிட்டது. அதிலும் தீபாவுக்காவது ஒரு காரணத்தை சொல்லி உடனே தள்ளுபடி செத்ததை தெளிவுபடுத்திய தேர்தல் அதிகாரி, விஷாலை போகவிட்டு போக்குகாட்டிவிட்டார். முதலில் தள்ளுபடி என்றும் பிறகு ஏற்பு என்றும் தகவல்கள் வெளியாகி, நள்ளிரவை நெருங்கும் நேரத்தில்
இதன்பிறகு, எதிர்பார்த்ததை போலவே இம்முறையும், ஆர்.கே.நகரில் பணம் என்பது, சாப்பாட்டு இலையில் தெளிக்கப்படும் நீரைப்போலவும், குக்கரில் வேகும் சோறைப்போலவும் தாராளமாக புழங்க ஆரம்பித்துள்ளது. சூரியனும் சுட்டெரிக்க, சூடாகிப்போயுள்ளனர் பிற வேட்பாளர்கள்.
Will RK Nagar by poll to be postponed once again?, sources says yes. Here are the reasons why sources indicating this.