தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டத்தில் 6 வயது சிறுமியை கடத்தி கற்பழித்து கொலை செய்த இருவரை ஊர்மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டத்தில் உள்ள மனோகர் பாத் பகுதியில் வசித்து வரும், பீகாரை சேர்ந்த கூலித்தொழிலாளி கலாம் ஹாசினி தம்பதிக்கு 7 வயதில் வாசிம் என்ற மகனும், 6 வயதில் சிறுமி குஷ்பு என்ற மகளும் உள்ளனர். இதில் சிறுமி குஷ்பு கடந்த புதன்கிழமை பள்ளி சென்று பின்னர் வீட்டிற்கு வரமால் மாயமாகியுள்ளார். இது குறித்து பல்வேறு பகுதியில் தேடிய போது, ரவி என்பவர், தங்கை குஷ்புவை அழைத்து சென்றதாக சகோதரன் வாசிம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ரவி மற்றும் அவரது நண்பர் ஒருவரை பிடித்து விசாரித்தபோது சிறுமி குஷ்புவை கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து இருவருக்கு தர்மடி கொடுத்த பொதுமக்கள் பின்னர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்