மலச்சிக்கல் எப்பவும் இருக்கிறதா? எதுக்கும் இந்த டெஸ்ட் பண்ணிக்கோங்க!!- வீடியோ

2017-12-09 1

உங்கள் உடலில் ஒரு ஹார்மோன் சுரப்பு குறைந்தால் மொத்த உடலிலும் பாதிப்பு உண்டாகும்;. அந்த பாதிப்புகள் எல்லாம் பலவித பிரச்சனைகளை உண்டாக்கும். அது எந்த ஹார்மோன் தெரியுமா? தியராய்டு. ஆமாம் அதுதான் பலவித உட்ல ஹார்மோன் மற்றும் உப ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் மேனேஜர் போல் நிர்வகிக்கும்.

அந்த தைராய்டு ஹார்மோன் குறைவதால் பாதிப்பு உண்டாகும். அதிகமானாலும் பாதொப்பு உண்டாகும்.

ஹைபோதைராய்டு என்பது தைராய்டு ஹார்மோன் சுரப்பது குறைவதால் உண்டாகும் பிரச்சனை. இது வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும். இதனால் மொத்த உடலிலும்பாதிப்பு உண்டாகும்.

ஹைபோதைராய்டின் ஆரம்ப நிலையில் உடல் சோர்வாக இருக்கும். செயல்கள் மந்தமாகும். சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாது. முகம் வீங்கும். முடி கொட்டும்.இளநரை தோன்றும். தோல் வறட்சி ஆகும்.ஹைபோதைராய்டின் அறிகுறிகளை நீங்கள் எப்போதும் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. இதனால் வரும் முன் காப்போமென மென்னெச்செரிக்கையாக இருப்பது நல்லதுதானே.

உங்களுக்கு ஹைபோ தைராய்டிசம் இருந்தால் உங்கள் சரும நிறம் மஞ்சளாக , வெளுத்து காணப்படும். அதோடு பலவீனமான நகங்கள் காணப்படும். எப்போதும் சருமம் வறண்டு காணப்படும்.


Symptoms of Hypothyroidism Symptoms of Hypothyroidism