நீங்க பயப்படாதீங்க, நாங்க இருக்கோம்.. பெண்களின் எழுச்சி வரவேற்பில் திக்குமுக்காடிபோன தினகரன்- வீடியோ

2017-12-09 13,450

ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு பெண்கள் அமோக ஆதரவு அளிப்பதை போன்ற ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிடும் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தினகரன் கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளார். தினகரன் காரில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இப்படி பிரசாரத்திற்கு செல்லும்போது அவருடன் சென்ற உதவியாளர் காருக்குள் இருந்தபடி வீடியோ ஒன்றை எடுத்துள்ளார்.

தினகரன் தரப்பு எடுத்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் தினகரனுக்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதாக காட்சிகள் உள்ளன. கடந்த தேர்தலை விட இம்முறை ஆர்.கே.நகரில் தினகரனுக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமைப்பு நடத்திய கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தினகரன் பிரச்சார வீடியோவும் அதையே எதிரொலிக்கிறது. "அம்மா தொகுதி நல்லா இருக்கனும் என்ற நோக்கத்தில் நாங்கள் நிற்கிறோம்" என்கிறார் டிடிவி தினகரன்.

Videos similaires