கரூர், மாயவரத்தில் நடந்தது ஞாபகம் இருக்கா? திருமாவை எச்சரிக்கிறாராம் எச். ராஜா- வீடியோ

2017-12-09 5,340

கரூர் மாயவரத்தில் நடந்தது ஞாபகம் இருக்கா என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை எச் ராஜா எச்சரித்துள்ளார். கடந்த 6ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ராமர், அயோத்தி குறித்துப் பேசியிருந்தார். அது தற்போது சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. திருமாவளவன் பேச்சை வைத்து பாஜகவினர், இந்து அமைப்புகள் கண்டனங்கள், வழக்குகளுடன் கிளம்பி விட்டனர். அவர்களில் எச். ராஜாவும் ஒருவர்.

கோவை ரயில் நிலையத்தில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திருமாவளவனை கண்டித்து கருத்து தெரிவித்தார்.
சிவன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களையும் இடிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசி இருப்பது மத கலவரத்தை தூண்டும் செயல் என அவர் தெரிவித்தார். திருமாவளவனை மானங்கெட்டவர் என்றும் எச் ராஜா கடுமையாக விமர்சித்தார்.

BJP national secretary H Raja condemns Thirumavalavan for his temple speech. He urges Tamilnadu govt to arrest Thirumavalavan on Gundas.