மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரியில் தமிழக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் பரிதாப நிலையை அறிந்து கேரள அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது.
மீனவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக தலா 600 லிட்டர் டீசல் தருவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. உதவிக்கரம் நீட்டிய கேரள அரசுக்கு தமிழக மீனவர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் கோரத்தாண்டவம் ஆடிய ஓகி புயல் கடலுக்குள் சென்ற குமரி மீனவர்களின் படகுகளை திசைக்கொன்றாக சிதறடித்தது. புயல் ஓய்ந்து கடல் அமைதி அடைந்தபோது மாயமான மீனவர்களை தேடும் பணி தொடங்கியது. இந்திய கடற்படை, கடலோர காவல் படை வீரர்கள் மீட்பு படகு, ஹெலிகாப்டர், ராணுவ விமானங்கள் மூலம்தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன
இதில் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்கப்பட்டனர். சில மீனவர்களின் உடல்கள் கேரள கடலோர பகுதிகளில் கரை ஒதுங்கியது. மரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் படகுகளுடன் மராட்டியம், கோவா, கர்நாடகா, குஜராத் மாநில கடற்கரைகளில் கரை ஒதுங்கியுள்ளனர்.
மகாராஷ்டிராவின் ரத்தினகிரி துறைமுகத்தில் தஞ்சம் புகுந்தவர்கள் குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ அமைப்புகளுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் கரை திரும்பிய தகவலை தெரிவித்துள்ளனர்.
Kerala government helps to Tamilnadu fishermen in Rathnagiri, Maharastra state.The families of Tamil Nadu fishermen missing in Cyclone Ockhi met Kerala CM Pinarayi Vijayan on Wednesday.