பொது இடத்தில் துப்பாக்கி முனையில் கொலையாளிகள் கைதால் பரபரப்பு- வீடியோ

2017-12-08 707

கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் பொது இடத்தில் துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இருதினங்களுக்கு முன் அதிமுக பிரமுகர் ஒருவரை நடு ரோட்டில் மர்ம கும்பல் வெட்டி கொலை செய்து தலைமறைவாகியது. இக்கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியில் நான்கு பேர் கொண்ட கும்பல் சொகுசு காரில் சுற்றி திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அரக்கோணம் காவல்நிலையத்தின் அருகே நான்கு பேர் கொண்ட கும்பல் சொசுகு காரில் நின்றிருந்த போது போலீசார் துப்பாக்கி முனையில் அக்கும்பலை காருடன் சுற்றி வளைத்தனர். போலீசாரை பார்த்த உடன் அக்கும்பலில் ஒருவர் தப்பி ஓட முயற்சித்துள்ளார். அவரை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர். அரக்கோணத்தில் பொது இடத்தில் துப்பாக்கி முனையில் கொலையாளிகளை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Des : The incident has led to the arrest of the culprits involved in the murder case and the police caught fire around the gunpoint in public places.

Videos similaires