இரண்டாவது நாளாக கன்னியாகுமரி மீனவர்கள் ஆர்பாட்டம்- வீடியோ

2017-12-08 432

ஒகி புயலால் நடுக்கடலில் சிக்கி தவிக்கும் கன்னியாகுமரி மீனவர்களை மீட்க வலியுறுத்தி இரண்டாவது நாளாக 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் குளச்சல் பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கன்னியாகுமரியில் ஒகி புயலுக்கு முன் கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் புயலின் தாக்கத்தால் நடுக்கடலில் சிக்கி தவித்து வருகின்றனர் .அவர்களை கரைக்கு கொண்டுவர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டுவதாக குற்றம்சாட்டிய அப்பகுதி மீனவர்கள் நேற்று குளித்துறை ,சின்னதுறை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் முற்றுகை போராட்டம் நடத்தினர் இரண்டாவது நாளான இன்று குளச்சல் பேருந்து நிலையத்தில் கொட்டில்பாடு, புதூர், குளச்சல், வாணியகுடி, கோடிமுனை, சைமன்காலனி, கடியப்பட்டணம், சின்னவிளை, பெரியவிளை உள்ளிட்ட ஒன்பது மீனவ கிராமத்தை சார்ந்த 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் பேருந்து நிலயத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர் .இதனால் பேருந்து நிலையத்தில் கடைகள் முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளது

Des : More than 5000 fishermen have been besieged by Kelchu bus stand on the second day demanding restoration of the fishermen of Kanyakumari fishermen

Videos similaires