வேலூர்: இளம்பெண் கழுத்தறுத்து கொலை - தந்தை பிணமாக கிணற்றில் மீட்பு- வீடியோ

2017-12-08 4

வேலூர் அருகே அரப்பாக்கம் கிராமத்தில் தந்தையும், மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரப்பாக்கம் மசூதி தெருவை சேர்ந்தவர் நசீர்,50. பீடி சுற்றும் தொழிலாளி. இவரது மனைவி தமீம் தம்பதிக்கு 3 மகள்கள் ஒருவர் நோய் வாய்பட்டு இறந்துவிட்டார். நசீரின் மனைவி தமீம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். 2வது மகள் சில ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். மூத்த மகள் யாஸ்மின் திருமணமாகவில்லை தந்தையுடன் யாஸ்மின் வசித்து வந்தார்.

நசீருக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது தலையில் ஆபரேசன் செய்து கொண்டார். அதிலிருந்து அவரால் சரியாக பேச முடியவில்லை. காலில் முறிவு ஏற்பட்டு சிரமப்பட்டு நடந்தார். இதனால் நசீர் மனமுடைந்து காணப்பட்டார். யாஸ்மினுக்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்து வந்தார். இது சம்பந்தமாக தந்தை-மகள் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நசீர் தனது வீட்டின் அருகில் இருந்த விவசாய கிணற்றில் இன்று காலை பிணமாக மிதந்தார். இதனை கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் இதுபற்றி அவரது மகளிடம் கூற வீட்டுக்கு சென்றனர். வீட்டுக்கதவு பூட்டப்படாமல் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தனர்.

Videos similaires