நான் நலமாக உள்ளேன்-விபத்தில் சிக்கிய புகழேந்தி பேட்டி- வீடியோ

2017-12-08 2,681

டிடிவி தினகரன் அணியை சேர்ந்த பெங்களூரு அதிமுக செயலாளராக உள்ள புகழேந்தி நேற்று கார் விபத்துக்குள்ளானதில் காயம் அடைந்தார். இரண்டு தோள் பட்டைகள் மற்றும் மார்பு பகுதியில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தேள் பட்டைகளில் ஏற்பட்டுள்ள காயத்தில் சவ்வுகள் விலகியுள்ளதால் அவருக்கு அறுவை கிசிக்கை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்து இன்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.

பெங்களூரு அதிமுக செயலாளராக இருப்பவர் புகழேந்தி. இவர் தற்போது டிடிவி தினகரன் அணியில் முக்கியஸ்தராக இருக்கிறார். நேற்று நண்பரின் மகன் திருமணத்திற்காக புகழேந்தி பெங்களூரில் இருந்து திண்டுக்கலுக்கு காரில் சென்றார். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பாலத்தில் அவரது கார் விபத்துக்குள்ளானது. அதில் புகழேந்தி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்தில் அவருக்கு வலது மற்றும் இடது தோள் பட்டை மற்றும் மார்பகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கலில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பின் அவர் கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைகாக அனுப்பிவைக்கப்பட்டார். நேற்று இரவு கோவை மருத்துவமனைக்கு சென்ற புகழேந்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது தோள் பட்டையில் சவ்வுகள் விலகியுள்ளதால் அவருக்கு ஆப்பரேசன் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து இன்று அவருக்கு ஆப்பரேசன் நடைபெறுகிறது.