இந்த மாதத்தில் கோஹ்லி, அனுஷ்கா சர்மா இடையே திருமணம் நடக்க போவதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் நேற்று இணையதளம் முழுக்க இந்த செய்தி வைரல் ஆனது. மேலும் அவர்கள் திருமணம் எப்போது நடக்கும், எங்கு நடக்கும், திருமணத்தில் யார் கலந்து கொள்ள போகிறார்கள் என்றெல்லாம் நிறைய தகவல்கள் பரப்பப்பட்டது. மேலும் கோஹ்லி திருமணத்திற்காகத்தான் இப்போது விடுமுறை எடுத்து இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த செய்திகள் அனைத்திற்கும் கோஹ்லியின் செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 தொடரில் இருந்து கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. கோஹ்லி கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஒரு மாதம் ஒய்வு கேட்டு இருந்தார். இதையடுத்து பிசிசிஐ அவருக்கு ஓய்வு அளித்தது. இனி அவர் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடக்கும் கிரிக்கெட் தொடரில் விளையாடவே இந்திய அணிக்கு திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோஹ்லியின் இந்த விடுமுறை அவரது கல்யாணத்திற்காகத்தான் என்று கூறப்பட்டது. கோஹ்லியும், அனுஷ்காவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வரும் நிலையில் தற்போது கல்யாணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியானது. மேலும் இத்தாலியில் மிகவும் பெரிய அளவில் திருமணம் நடக்கும், நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது.
A new spread like virus says that India skipper Virat Kohli will marry Anushka Sharma in this month. Spokesperson talks about Kohli-Anushka Sharma wedding, he says that it is a false news.