ஓடும் வேனில் தீ பற்றியதால் பரபரப்பு- வீடியோ

2017-12-07 164

தேசிய நெடுஞ்சாலையில் டெம்போ வேனில் பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவினால் வேன் முழுவதும் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் வண்டி மேட்டை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் தனது டெம்போ வேனில் அப்பகுதியில் உள்ள கடைகளில் சரக்குகளை ஏற்றி டெலிவரி செய்து வருகிறார். நேற்று இவர் தனது வேனில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது வேனின் முன் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வேனை நிறுத்தி விட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் தீ மளமளவென வேன் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்து போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். வேனில் ஏற்பட்ட தீவிபத்தால் தேசியநெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பும் ஏற்பட்டது.

Des : A fire broke out in the van on the highway by Tempo van on the national highway, causing a burning incident.

Videos similaires