இஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேமை ஏன் உலக நாடுகள் அங்கீகரிக்க கூடாது தெரியுமா?- வீடியோ

2017-12-07 76

இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலத்தை அங்கீகரித்துள்ள, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தங்கள் நாட்டு தூதரகத்தை ஜெருசலேத்தில் அமைக்க ஆயத்தமாகியுள்ளார். இதுவரை அமெரிக்க தூதரகம் டெல் அவிவ் நகரில்தான் இயங்கி வருகிறது. டிரம்பின் நடவடிக்கை உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏன் இவ்வாறு டிரம்பின் முடிவுக்கு எதிர்ப்புகள் கிளம்புகின்றன என்பதை தெரிந்து கொள்ள, புனித நகரமான, ஜெருசலேத்தின் பின்னணி என்ன என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
சிரியா, எகிப்து மற்றும் ஜோர்டான் நடுவேயான போரின் முடிவில், 1967ல் ஜெருசலேமின் கிழக்கு பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததது.

ஜெலுசலேத்தின் மேற்கு பகுதியை 1948ம் ஆண்டு, அரபு-இஸ்ரேல் யுத்தத்தின் முடிவில் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் ஜெருசலேத்தின் உரிமையை இஸ்ரேல் கொண்டாடியபோதிலும், அதை சர்வதேச சமூகமோ, அமெரிக்காவுமோ கூட இதுவரை ஏற்கவில்லை. ஆக்கிரமிப்பு நகரம் என்றே சர்வதேச சமூகம் அதை பார்க்கிறதே தவிர, இஸ்ரேலின் உரிமை என்று அதை சர்வதேச சமூகம் ஏற்கவில்லை.

Videos similaires