சென்னையில் சிறுமி ஹாசினி கொலை வழக்கு குற்றவாளி தஷ்வந்த் தனது தாயை கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்த நிலையில் அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். தஷ்வந்த் பிடிபட்டது எப்படி என்பது குறித்து போலீஸார் விளக்கமளித்தனர். போரூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பாபு- ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ஹாசினி (7). கடந்த பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த ஹாசினியை அதே குடியிருப்பில் வசித்துவரும் மென்பொருள் பொறியாளர் தஷ்விந்த் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் பெட்ரோல் ஊற்றி படுகொலை செய்துள்ளார்.
இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் கொலை, பலாத்காரம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்தில் குற்றவாளி தஷ்வந்த் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் தஷ்வந்த் மீது சென்னை காவல் ஆணையர் குண்டர் சட்டம் பாய்வதாக அறிவித்தார். இந்நிலையில் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அவருடைய தந்தை சேகர் (50) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் தஷ்வந்த் மீது சென்னை காவல் ஆணையர் குண்டர் சட்டம் பாய்வதாக அறிவித்தார்.