சூதாட்ட புகார் காரணமாக விளையாடாமல் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதான தடை சில மாதங்களுக்கு முன் நீக்கப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2018ல் நடக்கும் ஐபிஎல் போட்டியில் மீண்டும் விளையாடும் என்று கூறப்பட்டது. தற்போது 2018ம் வருடம் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோணி மீண்டும் விளையாடுவது உறுதியாகி உள்ளது. டோணியை மீண்டும் அணியில் சேர்ப்பதில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து இருக்கிறது. அவருடன் இன்னும் இருவர் அணியில் சேர் வாய்ப்புள்ளது.
2013ல் நடந்த ஐபிஎல்லில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சிஎஸ்கே அணிக்கு 2015ல் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து 2017 ஐபிஎல் வரை சிஎஸ்கே அணியால் ஐபிஎல் விளையாட முடியாமல் போனது. இதனால் சென்னை ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சென்னை அணியுடன் சேர்ந்து தடை வாங்கியது. இதையடுத்து இந்த இரண்டு அணிகளின் இழப்பை ஈடுகட்டும் வகையில் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் லைனஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றன. புனே அணிக்கு முதல் தொடரில் மட்டும் டோணி கேப்டனாக இருந்தார்.
இந்த நிலையில் சிஎஸ்க்கே , ராஜஸ்தான் அணி மீதான தடை காலம் முடிவடைந்துள்ளது. இந்த இரண்டு அணிகளும் 2018 ஐபிஎல் போட்டியில் மீண்டும் விளையாடும் என்று கடந்த ஜூலை மாதம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை அணிக்காக மீண்டும் டோணி விளையாடுவாரா என்ற கேள்விகள் எழுந்தது.
IPL council says Dhoni will be back to CSK team next year. It also added that Chennai Super Kings and Rajasthan Royals will be allowed to retain its 3 players who played for Rising Pune Supergiants and Gujarat Lions.