விஷாலை 'கோமாளி' என விமர்சித்த ராதிகா... லைட்டை நாட்டாமை பக்கம் திருப்பிய நெட்டிசன்ஸ்!- வீடியோ

2017-12-06 4,356

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் விஷால் வேட்பு மனு தாக்கல் செய்த பின் நடந்த பரபரப்பு, ஒரு அரசியல் திரைப்படத்தில் கூட இடம்பெறாத அளவுக்கு, விறுவிறுப்பான காட்சியாக அமைந்து.
விஷாலின் வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டதாக அறிவித்து, மீண்டும் பரிசீலனை செய்து நிராகரிக்கப்பட்டதால் அந்த பரபரப்பும், விறுவிறுப்பும் இரவு வரை தொடர்ந்தது.
நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் போட்டியிடப் போவதாக அறிவித்த நாளிலிருந்தே திரையுலகத்தில் நடக்கும் அரசியல், அரசியலில் நடக்கும் நாடகம் அற்புதமாக அரங்கேறி வருகிறது. விஷால் இடைத்தேர்தலில் நிற்பதை எதிர்த்து இயக்குநரும், நடிகருமான சேரன் தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகிறார். நேரடியாக விமர்சிக்க முடியாத சிலர் மறைமுகமாக விமர்சித்தும் வருகிறார்கள். அந்த விதத்தில் விஷாலுக்கு நேரடி எதிரியாக சித்தரிக்கப்பட்டு வரும் நடிசர் சரத்குமாரின் மனைவியான நடிகை ராதிகா சரத்குமார் நேற்று அவருடைய டுவிட்டரில் 'Bunch Of Jokers', அதாவது 'கோமாளிகளின் கூட்டம்' என ஒரு ட்வீட்டை போட்டிருந்தார். விஷாலின் வேட்பு மனுவில் போலி கையெழுத்து எனக் கூறி தள்ளுபடி செய்யப்பட்ட செய்திகள் வெளியானபோது இந்த ட்வீட்டை பதிவுசெய்தார் ராதிகா. ஆனால், யாரை அவர் அப்படி குறிப்பிடுகிறார் என்று எந்தப் பெயரையோ எந்தக் கூட்டம் எனவோ நேரடியாக சொல்லாமல் விட்டது அவரையே திருப்பித் தாக்கிவிட்டது.


Actor Vishal nominated in RK Nagar by poll election and later his nomination was declained. Actress Radhika Sarath Kumar has posted a tweet about vishal team, 'Bunch Of Jokers'.

Free Traffic Exchange

Videos similaires