ஓகி புயலால் பாதிக்கப்பட்ட சொந்தங்களுக்கு உதவி செய்வோம்: ஜி.வி. பிரகாஷ்- வீடியோ

2017-12-06 467

ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார். ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி கோரி நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார் ட்விட்டரில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களுக்கு அரசு அடிப்படை உதவிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் சென்னை வெள்ளத்தின்போது உலகம் முழுவதும் அனைவரும் ஆதரவு அளித்தார்கள். தமிழர்கள் அனைவரும் சேர்ந்து ஆதரவு அளித்து ஒரு விஷயத்தை செய்தோம். ஒற்றுமையை காண்பித்தோம். அதே போன்று கன்னியாகுமரி, நெல்லை மாவட்ட சொந்தங்களுக்கு நாம் உதவிக்கரம் நீட்ட வேண்டும். நானும் உதவுகிறேன், நீங்களும் உதவி செய்யுங்கள். இது போன்ற நேரத்தில் கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் என்றார்.
ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார். ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி கோரி நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார் ட்விட்டரில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

Actor cum music director GV Prakash Kumar has released a video on twitter asking people to help those affected by the Ockhi cyclone. He even insisted TN government to help the affected immediately.

Videos similaires