தமிழ் சினிமா... களைகட்டும் அடுத்த தேர்தல்!- வீடியோ

2017-12-06 1

தமிழ் சினிமா வியாபாரத்தையும், படரீலீஸ், படங்களின் வெற்றி தோல்விகளையும் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது சென்னை செங்கல்பட்டு திரைப்பட விநியோக பகுதியாகும். வசூல் முக்கியத்துவம் உள்ள திரையரங்குகள், மல்டிப்ளெக்ஸ் மால்கள் அதிகம் உள்ளது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில்தான். திரைப்பட ரீலீஸ் பஞ்சாயத்துகள், பைனான்ஸ் பாக்கிகள் பற்றிய முடிவுகளை எடுக்கக் கூடிய விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பில் எடுக்கப்படும் முடிவுகள் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளுர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவரின் மேற்பார்வையில்தான் முடிவு எடுக்கப்படும். இத்தனை முக்கியத்துவம் மிக்க விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் பொறுப்புக்கு பிரபல படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். தமிழ் சினிமாவில் அதிகாரம்மிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கெளரவ செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் பதவிக்கு ஞானவேல்ராஜா போட்டியிடுவது தமிழ் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Studio Green Gnanavelraja is contesting for the President post of powerful distributors president post.


Videos similaires