தேர்தல் அதிகாரியிடம் வாதாடிய விஷால்- பரபர வீடியோ

2017-12-06 5,241

என் வேட்புமனுவை ஏற்கும் முன்பு மட்டும் ஏன் யாருக்கோ போன் பேசுகிறீர்கள் என்று விஷால் தேர்தல் அதிகாரியை கேள்வி கேட்கும் வீடியோ வெளியாகி உள்ளது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்தார் நடிகர் விஷால். அவரது வேட்புமனு நேற்று முதலில் நிராகரிப்பட்டது. இதையடுத்து விஷால் நடுத்தெருவில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டார். தன் பக்க ஆட்கள் மிரட்டப்பட்டதாக ஆதாரத்துடன் நிரூபித்தார்.மதுசூதனன் ஆட்கள் தனக்கு ஆதரவான இரண்டு பெண்களை மிரட்டியதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டார் விஷால். பெரும் போராட்டத்திற்கு பிறகு அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் நிராகரிக்கப்பட்டது.

விஷால் வெளியிட்டுள்ள வீடியோவில் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை ஏற்குமாறு வாதாடுகிறார். ஒரு முயற்சி தான் சார். நீங்க எழுதியது தான் சார். நினைத்திருந்தால் போட்டோ எடுத்திருக்கலாம். அது கூட நாங்கள் செய்யவில்லை சார். நீங்க உங்க மனசாட்சிப்படி எழுதினீங்க சந்தோஷமாக இருந்துச்சு சார். பெருமையாக இருந்தது என்று அந்த வீடியோவில் கூறுகிறார்.

ஒரு வேட்பாளரை நிற்க வைக்க நீங்க இவ்வளவு முயற்சி எடுத்தீங்க சார். நீங்க தான் சார் முடிவு எடுக்கணும். அத்தனை வேட்பாளர்களுக்கு நீங்கள் முடிவு எடுக்கும்போது எனக்கு மட்டும் ஏன் சார் வெளியே போய் போன் பேசிவிட்டு வரணும். ப்ளீஸ் சார். கெஞ்சிக் கேட்கிறேன் சார் என்று கேட்கிறார் விஷால்.

A video in which actor Vishal is seen asking the election officer about his nomination has been released. Vishal's nomination was rejected in the first place and accepted later. When Vishal left the venue happily, his nomination was rejected again before he reached his house.