இசையமைப்பாளர் ஆதித்யன் மரணம்: திரையுலகினர் இரங்கல்- வீடியோ

2017-12-06 4

இசையமைப்பாளர் ஆதித்யன் இன்று மரணம் அடைந்தார். இசையமைப்பாளர் ஆதித்யன் ஹைதராபாத்தில் வசித்து வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக அவர் மரணம் அடைந்தார். அமரன், சீவலப்பேரி பாண்டி, உதவும் கரங்கள், மாமன் மகள், சிவன், சூப்பர் குடும்பம், கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இசையமைப்பதை நிறுத்திய ஆதித்யன் டிவியில் சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். அவரின் சமையல் நிகழ்ச்சி பெண்களிடையே மிகவும் பிரபலம். ஆதித்யனின் மரண செய்தி அறிந்த திரையுலகினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Music composer Adhithyan passed away in Hyderabad. He composed music for many movies including Amaran, Super Kudumba, Seevalaperi Pandi. Celebrities have expressed their condolences.