ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த தினகரன் குரூபினர் ஒருவருக்கொருவர் தள்ளிக்கொண்டும் இடித்துக்கொண்டும் விழுந்து வாரி எழுந்தனர். தடுமாறி ஜெயலலிதாவின் சமாதியின் மீது ஏறிய தினகரனை கலைராஜன் அலேக்காக தாங்கிப்பிடித்தார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக அறிவித்தது அப்பல்லோ மருத்துவமனை. இது தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மரணமடைந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அவரது முதலாமாண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் படத்திற்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திலும் அதிகாலை முதலே ஏராளமான தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதா மறைந்த நாளான இன்று அதிமுக சார்பில் துக்க நாளாக கடைபிடிக்கப்பட்டது.
ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிமுகவினர் கறுப்பு சட்டை அணிந்து துக்க நாளாக கடைபிடித்தனர். மேலும் அவர்கள் சென்னை அண்ணாசாலையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் வரை அமைதி ஊர்வலம் நடத்தினர்.
Dinakaran team tribute in Jayalalitha memorial remembered Actor Senthil's Dickylona game. Dinakaran team paid tribute in Jayalaitha's memorial. They were pushed each other and some sat on jayalalitha samadhi.