ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழகம் வரலாறு காணாத பெருங்கூத்துகளை கண்டது. அதில் முக்கியமானது டூப்ளிகேட் ஜெயலலிதாவாக சசிகலா உருவெடுத்தது; வாயே திறக்காத அமைச்சர்கள் பேசுகிறேன் என கூறிக் கொண்டு உளறிக் கொட்டுவது, தமிழகத்தில் ஆளுநரின் தர்பார் ஓங்கியது, பாஜக சட்டாம்பிள்ளைத்தனம் செய்வது என்பதுதான் பிரதானமானவை. ஜெயலலிதா மறைந்த பின்னர் முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்றார். ஜெயலலிதா உடலை புதைத்த சில விநாடிகளிலேயே அதிமுக இனி எங்கள் வசம் என கொக்கரித்தார் சசிகலாவின் கணவர் நடராஜன். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓரிருநாட்கள் அமைதி காத்தது சசிகலா கோஷ்டி.. அதற்கு பின்னர் தினந்தோறும் போயஸ் கார்டனில் நாடகம்..நாடகம்..
நாள்தோறும் போயஸ் கார்டனில் காக்கைகள் கூட்டம் அலைமோதியது.. மெல்ல மெல்ல.. அய்யோ.. சின்னம்மா.. நீங்கதான் எல்லாமே என குரல் உயர்ந்தது.
இந்த குரலின் உச்சமாக சின்னம்மா... சின்னம்மா என ஒப்பாரி வைத்து நீங்களே கட்சி, ஆட்சி நடத்துங்கள் என்றார்.. அதிமுக பொதுக்குழு கூடி சசிகலாவை கட்சியின் பொதுச்செயலராக நியமித்து அசிங்கத்தை தேடிக் கொண்டது.
Tamil Nadu has witnessed many things that after the Jayalalithaa's demise. If Jayalalithaa were alive we would not see Sasikala's politics.