புதிய லுக்கில் தெறிக்கவிட்ட ஜெ.தீபா... வேட்புமனு தாக்கல் செய்ய வந்த கெட்டப்பை பாருங்க

2017-12-04 31,324

சென்னை ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். இதன் காரணமாக ஜெ.தீபா இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தார். எப்போதும் போல அல்லாமல் அவரது லுக் இந்த முறை வித்தியாசமாக இருந்தது. மேலும் அவரது தனது புடவையில் இருந்து தலைமுடி வரை அனைத்தையும் வித்தியாசமாக மாற்றி இருந்தார். ஜெ.தீபாவின் புதிய தோற்றத்தை பார்த்த மக்கள் திகைப்பில் ஆழ்ந்தார்கள்.

சமீப காலமாக தன்னுடைய தோற்றத்தை அடிக்கடி மாற்றிவரும் செயலை செய்து வருகிறார் ஜெ.தீபா. இந்த முறை ஆர்.கே நகர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அவர் வித்தியாசமாக வீட்டில் அணிவதை போன்ற புடவையை அணிந்து இருந்தார்.

எப்போதும் ஜெ.தீபா முகத்தில் ஒரு பயம் குடி கொண்டு இருக்கும். இந்த முறை பயத்தை விட அதிகமாக சோகமும் களைப்பும் குடிகொண்டு இருந்தது. வேட்புமனு தாக்கல் செய்ய காத்திருந்தாலா இல்லை கடைசி டோக்கன் வாங்கிய விரக்தியா என்று தெரியவில்லை மிகவும் சோகமாக இருந்தார்.

முதல்முறையாக ஜெ.தீபா வித்தியாசமான தோடு அணிந்து இருந்தார். எப்போது சிறிய தோடு அணியும் அவர் இப்போது பெரிய தோடு போட்டு இருந்தார். அரசியல்வாதிகளின் தோற்றம் ஒரே மாதிரி இருந்தால் மட்டுமே மக்கள் மத்தியில் அவர்கள் முகம் பதியும். இப்படி அடிக்கடி தன்னனுடைய தோற்றத்தை மாற்றுவதன் விபரீதம் அவருக்கு தெரியவில்லை போல.



J.Deepa has completely changed her look to contest in RK nager election.

Videos similaires