பிக் பாஸ் புகழ் நடிகையை வைத்து படம் எடுக்கும் முருகதாஸ்: அப்போ விஜய் 62 கதி?- வீடியோ

2017-12-04 3

ஏ.ஆர். முருகதாஸ் அடுத்ததாக அக்ஷய் குமாரை வைத்து ஹாலிவுட் படம் ஒன்றை ரீமேக் செய்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் விஜய் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். படத்தின் ஹீரோயினாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்யக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் முருகதாஸின் அடுத்த படம் அக்ஷய் குமாருடன் என்று கூறப்படுகிறது. மில்லியன் டாலர் பேபி என்ற ஹாலிவுட் படத்தை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை வைத்து இந்தியில் ரீமேக் செய்கிறாராம் முருகதாஸ். இந்த படம் மூலம் தொலைக்காட்சி நடிகை மரினா குவார் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அக்ஷய் குமாருடன் சேர்ந்து நடிப்பது ஒரு கனவு. மாடலிங்கில் இருந்து நடிக்க வந்தது பெரும் போராட்டமே. ஆனால் நிச்சயம் ஒரு நாள் அங்கீகாரம் கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருந்தேன் என்கிறார் மரினா. மரினா சி.ஐ.டி. என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்துள்ளார். மேலும் சல்மான் கான் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசனிலும் கலந்து கொண்டுள்ளார்.

Television actress Marina Kuwar is gearing up to make her big screen debut with a film directed by AR Murugadoss. It features Akshay Kumar. The yet untitled film is a remake of Hollywood movie Million Dollar Baby.