காஞ்சனா 3 படத்தில் இருந்து ஓவியா விலகவில்லை: சாட்சி இருக்கு பாஸ்- வீடியோ

2017-12-04 4


ஓவியா காஞ்சனா 3 படத்தில் இருந்து விலகியதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஏகப் பிரபலமாகியுள்ளார் ஓவியா. அவர் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்நிலையில் அவர் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து படக்குழு ஓவியா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. காஞ்சனா 3 படத்தில் இருந்து ஓவியா விலகிவிட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை. அவர் படப்பிடிப்பில் ஒழுங்காக கலந்து கொண்டு வருகிறார். நேற்று இரவு நடந்த படப்பிடி்பில் கூட ஓவியா கலந்து கொண்டார். ராகவா லாரன்ஸ், ஓவியா சேர்ந்து நடித்தபோது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. ஓவியா காஞ்சனா 3 படத்தில் இருந்து விலகிவிட்டதாக வதந்தியை பரப்பியவர்கள் ஷட்அப் பண்ணுங்க என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் தெரிவித்துள்ளனர். ஓவியாவை தேடி பட வாய்ப்புகள் வந்து குவிந்தாலும் அவர் அனைத்தையும் ஏற்பது இல்லையாம். ஓவியா பார்ட்டிகளில் அதிகம் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.

Oviya didn't walk out of Raghava Lawrence's Kanchana 3. She is very much a part of the movie. She even attended the shooting that was held last night.