சாய் பாபா கோவிலுக்கு விசுவாசம் கெட்டப்பில் வந்த அஜீத்: வைரல் வீடியோ

2017-12-04 2

அஜீத் சாய் பாபா கோவிலுக்கு சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. விவேகம் படத்தை அடுத்தும் அஜீத் சிவா இயக்கத்தில் தான் நடிக்கிறார். அந்த படத்திற்கு விசுவாசம் என்று தலைப்பு வைத்துள்ளனர். அதுவும் தல அடிக்கடி ரசிகர்களை பற்றி பேசும்போது பயன்படுத்தும் வார்த்தையையே தலைப்பாக வைத்துள்ளனர். இந்த படத்தில் தல கருப்பு நிற முடியுடன் ஸ்டைலாக வருவார் என்று கூறப்பட்டுள்ளது. அஜீத் சாய் பாபா கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் தனது தலைக்கு கருப்பு நிற டை அடித்துள்ளார். அவர் வந்தபோது எடுத்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. அஜீத்தை இளமையான கெட்டப்பில் பார்த்த ரசிகர்கள் குஷியாகி அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அஜீத் சிரித்த முகத்துடன் அந்த புகைப்படங்களில் உள்ளார்.
அஜீத், சிவா நான்காவது முறையாக ஒன்று சேர்ந்துள்ள படம் விசுவாசம். இந்த படத்தில் பிரேமம் புகழ் நிவின் பாலி நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது வெறும் வதந்தி என்றும், வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்றும் நிவின் தெரிவித்துள்ளார்.


Ajith has finally changed the colour of his hair. Ajith sporting black hair was seen visiting Sai Baba temple. Video taken during his visit has gone viral on social media. Ajith will ditch his salt and pepper look in his upcoming movie Viswasam to be directed by Siva.