ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு என்ற செய்தி தொடர்பான கார்ட்டூனை சுட்டிக் காட்டியுள்ள எஸ்.வி.சேகர் எல்லாம் நல்லாதானே போயிட்டிருந்தது, இது என்ன புது டுவிஸ்ட் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக, தீபா பேரவை என பல முனை போட்டி நிலவுகிறது. இதில் விஷாலும் போட்டியிடுகிறார். இந்நிலையில் தேமுதிக, பாமக போட்டியிடவில்லை. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள் ஆகிய கட்சிகள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் மதிமுக நிலைப்பாடு குறித்து நேற்று தாயகத்தில் உயர்நிலை குழு கூடி ஆலோசனை நடைபெற்றது. இதில் மதிமுகவின் ஆதரவு திமுகவுக்கு என்று அறிவிக்கப்பட்டது
கடந்த 2004-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் மதிமுக கூட்டணி வைத்தது. அதோடு சரி அதன்பின்னர் அந்த கூட்டணி முறிந்தது. கூட்டணி முறிப்புக்கு இரு கட்சியின் தலைமையிடையே ஏற்பட்ட மனக்கசப்புதான் காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு, திமுகவுடன் மதிமுக கூட்டணி வைத்துள்ளது.
MDMK declares to give support to DMK in RK Nagar bypoll. S.Ve.Shekher highlighted the cartoon about the new alliance and said all things going well then, why this kind of new twist?