எதிர்காலத்துல இவர்தான் இந்திய அணி கேப்டன்.. இப்பவே டிரெய்னிங் கொடுப்போம்!- வீடியோ

2017-12-04 12,873

நியூசிலாந்தில் நடக்க இருக்கும் அண்டர் 19 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் அண்டர் 19 இந்திய அணியை வழிநடத்தப்போகும் கேப்டன் பெயரும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இவரை பல எதிர்கால திட்டங்களை மனதில் கொண்டு இந்திய தேர்வு வாரியம் தேர்வு செய்துள்ளது. முக்கியமாக எதிர்காலத்தில் கண்டிப்பாக இவர் இந்திய அணியை வழிநடத்துவார் என்று கூறப்படுகிறது.
இவரது சாதனைகளையும், திறமைகளையும் இப்போதே கிரிக்கெட் ரசிகர்கள் பட்டியலிட ஆரம்பித்துவிட்டனர்.அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் எப்போதும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும். இதுவரை 2000, 2008, 2012 அண்டர் 19 உலகக் கோப்பைக்கு போட்டிகளை இந்திய அணி வென்று இருக்கிறது. அதேபோல் சென்ற 2016 வருடம் நடந்த போட்டியில் இறுதி சுற்று வரை சென்று மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோல்வி அடைந்தது. இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்கு நிகராக அண்டர் 19 போட்டிகளில் இந்தியா சிறந்து விளங்குகிறது.

இந்த நிலையில் 2018ல் நடக்கும் அண்டர் 19 உலகக் கோப்பை போட்டிக்கான அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. இந்த போட்டிகள் வரும் ஜனவரி மாதம் 13ம் தேதி நியூசிலாந்தில் தொடங்க இருக்கிறது. மேலும் இந்த தொடர் பிப்ரவரி மாதம் 3ம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள்தான் இன்னும் 5 வருடங்களில் ஐசிசி போட்டிகளில் கலக்குவார்கள்.



New captain for India's under 19 world cup has been selected by BCCI. Mumbai batsman Prithvi Shaw will lead a 16-member Indian squad in 2018 ICC U-19 Cricket World Cup.

Videos similaires