இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. டெல்லியில் நிலவி வரும் மாசு காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்பட்டார்கள். இந்த போட்டியில் புகை, இலங்கை வீரர்களுக்கு மிக அதிகமாக தொல்லை கொடுத்தது. புகையை காரணம் காட்டி இலங்கை வீரர்கள் பல முறை போட்டியை நிறுத்த முயற்சி செய்தனர். இந்த நிலையில் போட்டி முடித்த பின் இலங்கை வீரர்கள் வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. இலங்கை வீரர்கள் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டார்கள் என்று அந்த அணியின் கோச் கூறியுள்ளார்.
டெல்லியில் தற்போது மிகவும் மோசமான அளவிற்கு புகை நிலவி வருகிறது. உலகில் தற்போது டெல்லி மாசடைந்த தலைநகரங்களில் பட்டியலில் முக்கியமான இடத்தை வகிக்கிறது. தற்போது டெல்லியில் பனி புகை எல்லாம் சேர்ந்து ஒரு கலவையாக இருக்கிறது. டெல்லியில் புகையின் அளவு 381 புள்ளிகள் என்று அபாயகட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது அங்கு இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
இலங்கை வீரர்கள் அனைவரும் முகத்தை மாஸ்க்கால் மூடிக்கொண்டு விளையாடினார்கள். இலங்கை அணியின் வீரர்கள் நடுவரிடம் போட்டியை நிறுத்தும்படி முறையிட்டனர். ஆனால் நடுவர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை. புகையை காரணம் காட்டி லாகிரு காமேஜ், சுரங்கா லக்மால் ஆகியோர் விளையாடாமல் வெளியேறினார்கள். மற்ற பிளேயர்கள் களம் இறங்க மறுத்த போது இலங்கையின் பயிற்சியாளர்களே 'நாங்கள் களம் இறங்க முடியுமா?' என்று கேட்டு நடுவர்களிடம் சண்டையிட்டனர்.
இந்த நிலையில் போட்டி முடித்து இலங்கை வீரர்கள் வாந்தி எடுத்து இருக்கிறார்கள். இதுகுறித்து இலங்கை அணியின் சுகாதார ஆலோசகர் இதுகுறித்து கூறும் போது ''வீரர்கள் ரொம்பவே பாதிக்கப்பட்டார்கள். சுரங்கா நான்கு முறைக்கும் அதிகமாக வாந்தி எடுத்துவிட்டார். எல்லோரும் ஆக்சிஜன் சிலண்டர்களை வைத்து சுவாசித்துக் கொண்டு இருக்கிறார்கள்'' என்று மிகவும் கோபமாக பேசி இருக்கிறார்.
Third test match between India vs Sri lanka held today in Delhi. Delhi pollution disturbs players and camera. Sri Lanka planned to stop the test match against India. Sri Lanka coach says that their players have vomited after Delhi test match.