எம்ஜிஆரை ‘அம்பலப்படுத்த’ கருணாநிதியுடன் கை கோர்த்த ஜெயலலிதா- வீடியோ

2017-12-04 25

எம்ஜிஆரை அவமானப்படுத்த கருணாநிதியும் ஜெயலலிதாவும் திட்டமிட்டிருந்ததாகவும் இதை முறியடிக்கவே ஜெயலலிதாவை மீண்டும் தம்முடன் இணைத்துக் கொண்டதாகவும் மறைந்த முதுபெரும் எழுத்தாளரும் எம்ஜிஆரின் மிகுந்த நம்பிக்கைகுரியவருமாக இருந்த வலம்புரிஜான் பதிவு செய்துள்ளார். எம்ஜிஆரின் தாய் வார இதழின் ஆசிரியராக இருந்தவர் வலம்புரி ஜான். அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தார். எம்ஜிஆரின் உத்தரவுக்கேற்ப ஜெயலலிதாவின் அரசியல் பேச்சுகளை எழுதிக் கொடுத்தவர் வலம்புரிஜான். கடைசி நாட்களில் ஜெயலலிதாவை மிகக் கடுமையாக எதிர்த்தார். நக்கீரன் வார இதழில் வணக்கம் என்ற தலைப்பில் தமிழகத்தையே அதிரவைத்த அந்தப்புர அரசியலை அம்பலப்படுத்தி ஜெயலலிதா- சசிகலாவின் பெருங்கோபத்துக்குள்ளானார். அந்த வணக்கம் தொடரை நக்கீரன் ஏடு புத்தகமாகவும் வெளியிட்டது.

அதில்தான் இப்போது சர்ச்சையாகி வரும் சோபன்பாபு- ஜெயலலிதா விவகாரத்தையும் வலம்புரிஜான் பதிவு செய்திருந்தார். சோபன்பாபு விவகாரத்தை ஜெயலலிதா எழுதிய அதே காலகட்டத்தில் சட்டென ஜெயலலிதாவை தம்முடன் எம்ஜிஆர் மீண்டும் இணைத்துக் கொண்டார். இதன் பகீர் பின்னணி குறித்து வலம்புரி ஜான், நக்கீரனின் வணக்கம் தொடரில் பதிவு செய்துள்ளதாவது:
எம்ஜிஆர் மீண்டும் ஜெயலலிதா பைத்தியம் ஆனதற்கு ஆர்.எம். வீரப்பன் ஏற்பாடு செய்த ஒரு நாட்டிய நாடகம் மாத்திரமே காரணம் இல்லை. இந்த வெறித்தனமான அங்கீகாரத்துக்கு வேறு ஒரு பின்னணி இருக்கிறது.

Late Writer and Rajya Sabha MP Valampuri John who helped Jayalalithaa in her early political years. According to Valampuri John's Vanakkam Book, he registered once Karunanidhi and Jayalalithaa joined with hands againt MGR in early 1980.