ஓகி புயலால் பாதிப்பு... கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு -

2017-12-02 523

ஓகி புயலால் பெரும் சேதத்துக்குள்ளான கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடு பழனிச்சாமி அறிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான ஓகி புயல் கடந்த 2 தினங்களுக்கு தென் தமிழகத்தை ஒரு புரட்டு புரட்டி விட்டது. இதனால் கடந்த இரு நாள்களுக்கு கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக அதிக கனமழை பெய்தது

கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டது. இதனால் மக்கள் வெளியேற முடியாதபடி தத்தளித்தனர். குறிப்பாக கன்னியாகுமரி பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. இங்கு மின்சார வயர்கள் அறுந்து விழுந்துள்ளன. கன்னியாகுமரியையே புரட்டி போட்ட இந்த புயலுக்கான நிவாரண பணிகளை தமிழக அரசு ஆராய்ந்து வருகிறது. மேலும் வெள்ள சேத நிவாரணமாக மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ. 25 கோடி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளார்.

CM Edappadi Palanisamy announces Rs. 25 Crores for Kanyakumari relief measures as the Ockhi causes severe damage.

Videos similaires