உலுக்கியெடுத்த ஓகி புயல் பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா? அசந்துருவீங்க

2017-12-02 12

ஓகி புயலுக்கு வங்கதேசம் நாடு பெயர் வைத்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதன் அர்த்தம் என்ன என்று யாருக்காவது தெரியுமா. ஓகி என்றால் வங்க மொழியில் கண் என்ற அர்த்தமாம். புயல்களுக்கு பெயர் வைக்கும் முறையை உலக வானிலை அமைப்பு மற்றும் ஐ.நா. தேசிய பொருளாதார மற்றும் ஆசிய- பசிபிக்கிற்கான சமூக அமைப்பு ஆகியன கடந்த 2000-ஆம் ஆண்டு தொடங்கியது. வானிலை முன்னறிவிப்பாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே முன்னறிப்பு, எச்சரிக்கை உள்ளிட்டவை குறித்த தகவல்களை எளிதாக பரிமாறப்படுவதற்காக வெப்ப மண்டல் சூறாவளிகளுக்கு பெயர் வைக்கும் பழக்கம் உருவாகியுள்ளது.

வடக்கு அட்லாண்டிகா, வடகிழக்கு பசிபிர், வட மத்திய பசிபிக், வடமேற்கு பசிபிக், வட இந்திய கடல், தென்மேற்கு இந்திய கடல், ஆஸ்திரேலியன்ஸ தென் பசிபிக் மற்றும் தெற்கு அட்லாண்டிக் ஆகிய நாடு முழுவதும் ஏற்படும் புயல்களுக்கு 9 பகுதிகளே பெயர் வைத்து வருகின்றன.
வடகிழக்கு இந்திய நாடுகளில் வங்கதேசம், இந்தியா, மாலத் தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய 8 நாடுகள், 8 பெயர்களை கொடுக்கும். அதன் படி மொத்தம் 64 பெயர்கள், ஒரு நாட்டுக்கு ஒரு பெயர் என்ற வரிசையில் புயலுக்கு பெயர் வைக்கப்படும்.

Cyclone Ockhi is expected to bring heavy to very heavy rainfall over south Tamil Nadu during the next 36 hours. The name Ockhi was given by Bangladesh which in Bengali means ‘eye’

Videos similaires