சோபன் பாபுவுடனான உறவை ஜெ. ஊரறிய எழுதியது ஏன்? ‘எக்ஸ்போஸ்’ செய்த வலம்புரிஜான் flashback- வீடியோ

2017-12-02 43

குமுதம் வார இதழில் சோபன் பாபுவுக்கும் தமக்குமான உறவை பகிரங்கமாக ஜெயலலிதா எழுதியது ஏன் என்பதை வார்த்தை சித்தர் வலம்புரிஜான் ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்திலேயே நக்கீரன் வார இதழில் எழுதிய வணக்கம் தொடரில் அம்பலப்படுத்தினார். 1978-80களில் ஜெயலலிதா குமுதம் வார இதழில் சோபன் பாபு உள்ளிட்டோர் பற்றி தொடரை எழுதினார். அந்த காலகட்டத்தில் எம்ஜிஆரின் நம்பிக்கைக்குரியவராக இருந்து அவரது சொந்த வெளியீடான தாய் பத்திரிகையை ஆசிரியராக இருந்து நடத்தியவர் வலம்புரிஜான்.

தாய் பத்திரிகை காலத்தில் இருந்து எம்ஜிஆர் மறைவு வரை எம்ஜிஆர்-ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவராகவர் இருந்தவர் வலம்புரிஜான். ஜெயலலிதாவின் தொடக்க கால அரசியலில் அவரது பேச்சுகளை எழுதிக் கொடுத்தவரும் வலம்புரிஜான். ஜெயலலிதாவின் 1991-96 அராஜ ஆட்சி காலம் குறித்து நக்கீரன் வார இதழில் "வணக்கம்" என்ற தலைப்பில் வலம்புரிஜான் எழுதிய தொடர் பெரும் பரபரபை ஏற்படுத்தியது. அத்தொடர் நக்கீரன் வெளியீடாக புத்தகமாகவும் வந்துள்ளது. அதில் சோபன் பாபுவுக்கும் தமக்குமான உறவை ஜெயலலிதா ஏன் பகிரங்கப்படுத்தினார் என்பது குறித்து "சோபன்பாபுவுடன் ஜெயலலிதா" என்ற அத்தியாயத்தில் வலம்புரிஜான் எழுதியிருப்பதாவது:

Later Tamil writer, orator and Rajya Sabha MP Valampuri John wrote an article about the Jayalalithaa and Sobhan Babu relationship.