கொலை மிரட்டல் எதிரொலி: ஜெ.-சோபன்பாபு மகள் என கூறிய அம்ருதா தலைமறைவு?- வீடியோ

2017-12-01 3

ஜெயலலிதாவுக்கும் சோபன் பாபுவுக்கும் பிறந்த மகள் என உரிமை கோரிய அம்ருதாவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்ததால் அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் தங்கை எனக் கூறிய பெங்களூரு ஷைலஜாவின் மகள் அம்ருதா. ஷைலஜா 2015-ம் ஆண்டு காலமானர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பெரியம்மா ஜெயலலிதா மரணத்துக்கு நீதி கேட்கப் போவதாகவும் மாமா மகள் தீபாவுடன் கரம் கோர்த்துவிட்டதாகவும் அம்ருதா கூறினார். ஆனால் கடந்த சில மாதங்களாக தம்மை ஜெயலலிதா- சோபன் பாபு மகள் என உரிமை கோரி வருகிறார் அம்ருதா.

இது தொடர்பாக அம்ருதா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் முறையிடவும் அறிவுறுத்தியது உச்சநீதிமன்றம்.
இதனிடையே ஜெயலலிதாவின் உறவினர்கள், நட்பு வட்டாரங்கள் அனைவருமே சொல்லிவைத்தாற் போல, ஜெயலலிதாவுக்கும் சோபன்பாபுவுக்கும் பிறந்தது பெண் குழந்தை என கூறி வருகின்றனர். இந்த நிலையில் அம்ருதாவும் அவருக்கு ஆதரவாக இருக்கும் ஜெயலலிதாவின் உறவினர்களும் திடீரென தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

Source said that, Amrutha who is claiming the daughter of Jayalalithaa has been receiving death threats.

Videos similaires