இது நம்ம தீபாவா..???- வீடியோ

2017-12-01 4,114

வர வர தீபா புதுப் புது ஸ்டைலில் கலக்க ஆரம்பித்துள்ளார் அரசியல் களத்தை. ஆரம்பத்தில் பல்வேறு விஷயங்களில் சொதப்பிய அவர் இப்போது நிறைய மாறி வருகிறார். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கேற்ப தீபாவின் பல மாற்றங்கள் அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும், இதெல்லாம் மக்கள் மத்தியில் எடுபடுமா என்பதுதான் விஷயமே. காரணம், அவரும் அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையில்தான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வந்திருந்த தீபா பார்க்கவும் வித்தியாசமாக காட்சி அளித்தார்.

ஆரம்பத்தில் தீபா சுடிதார் உள்ளிட்ட மாடர்ன் டிரஸ்ஸில் வந்தார். பிறகு ஜெயலலிதா போல புடவைத் தலைப்பை மேலே சுற்றியபடி வர ஆரம்பித்தார்.

இப்போது மேக்கப்பில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் தீபா என்று தெரிகிறது. அவரது முந்தைய முகத் தோற்றத்தையும், இப்போதைய தோற்றப் பொலிவையும் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.

இன்று ஜெ.தீபா அணியின் தர்மபுரி மாவட்ட பொருளாளர் மாதையன் வீட்டு திருமணத்தை, ஜெ.தீபா நடத்தி வைத்தார்.. அப்போது அவர் வழக்கம் போல இல்லாமல் புதுப் பொலிவுடன் காட்சி அளித்தார். வழக்கமாக புடவைத் தலைப்பை சுற்றிக் கொள்ளாமல் வித்தியாசமான தோற்றத்தில் காணப்பட்டார்.

J Deepa came in a new avatar when she conducted a marriage of her supporter's daughter in Chennai today.