டெல்லியில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விராட் கோஹ்லி குறித்து உலக அழகி மனுஷி சில்லார் பேசி இருக்கிறார். மேலும் அந்த நிகழ்ச்சிலேயே அவர் வெளிப்படையாக 'ஐ லவ் யூ விராட் கோஹ்லி' என்றும் கூறியிருக்கிறார். அதேபோல் தான் அப்படி சொன்னதற்காக காரணத்தையும் அவர் விளக்கி இருக்கிறார். மேலும் அவர் கோஹ்லியிடம் முக்கியமான ஒரு கேள்வியையும் கேட்டார். மனுஷி சில்லாரின் வெளிப்படையான பேச்சும், கோஹ்லியின் பதிலும் அனைவரையும் கவர்ந்து இருக்கிறது.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லார் 2017ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை பெற்றுள்ளார். ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பெண் ஒருவர் இந்தப் பட்டத்தை பெற்றுள்ளார். 108 பேர் கலந்து கொண்ட உலக அழகி போட்டியில் இதில் இவர் தனி ஆளாக பட்டம் வென்று இருக்கிறார். டாக்டர் படிக்கும் பெண்ணான இவரை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இவரையும் இந்தியாவில் சாதனை செய்யும் மற்ற சிலரையும் பாராட்டுவதற்காக டெல்லியில் விழா ஒன்று நடத்தப்பட்டது.
இந்த விழாவிற்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி அழைக்கப்பட்டு இருந்தார். அவர் மனுஷி சில்லாருக்கு, இந்தியாவிற்கு பெருமை தேடிக்கொடுத்ததற்காக விருது வழங்கினார். இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில வெளியாகி வைரல் ஆகியுள்ளது.