தே...ப... கெட்ட வார்த்தை சர்ச்சை: ஜோதிகா என்ன சொல்கிறார்?- வீடியோ

2017-12-01 3

நாச்சியார் டீஸரில் கெட்ட வார்த்தை பேசியது குறித்து ஜோதிகா விளக்கம் அளித்துள்ளார். பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் நாச்சியார். அண்மையில் வெளியான நாச்சியார் டீஸரில் ஜோதிகா கெட்ட வார்த்தை பேசியிருப்பார். டீஸரில் ஒரேயொரு வார்த்தை தான் வரும் அதுவும் ஜோதிகா பேசும் கெட்ட வார்த்தை. இதை கண்டித்து பாலா, ஜோதிகா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜோதிகாவிடம் டீஸர் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, அது பற்றி தற்போது எதுவும் பேச வேண்டாமே. படம் ரிலீஸானால் சர்ச்சைக்கு முடிவு வந்துவிடும் என்றார். நாச்சியார் படத்தில் ஜோதிகா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jyothika said that she doesn't want to talk about Naachiyar teaser issue and it will get solved once the movie hit the screens. Jyothika was seen swearing in the teaser as told by director Bala.

Videos similaires