சென்னையில் விரைவில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. விட்டுவிட்டு மழை பெய்யும். காற்றின் நகர்வைப் பொருத்தே மழை வாய்ப்பு இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார். வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஒகி புயலால் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஓகி புயல் தீவிர சூறாவளியாக மாற்றமடைந்து லட்சத்தீவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
தென்கிழக்கு அரேபிய கடலில் உள்ள ஒகி புயல், மினிகோயில் இருந்து 110 கி.மீ. வடகிழக்குத் திசையிலும் அமினி திவி தீவில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்குத் திசையிலும் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்து வரும் தினங்களில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அத்துடன் ஓகி புயல் மேலும் வலுப்பெற்று அடுத்த 24 மணிநேரத்துக்குள் தீவிரமடைந்து லட்சத் தீவுப் பகுதியைக் கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.
while Chennai and surrounding districts to see on and off rains as more bands are forming as a result of Cyclone Ockhi outer bands and pull effect.