ஓவியா ஆர்மி இருக்கட்டும் இப்ப பட்டைய கிளப்புவது கமல் ஆர்மி தான்- வீடியோ

2017-12-01 1

விஸ்வரூபம் 2 படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது. விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்துக் கொண்டிருக்கிறார் கமல் ஹாஸன். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு திங்கட்கிழமை சென்னையில் துவங்கியது. ஒரு வாரம் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. சென்னையில் உள்ள ஓடிஏ ராணுவ அகாடமியில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார் கமல். இந்நிலையில் தான், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் ராணுவ உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கமல். கமல் ஹாஸனும், ஆண்ட்ரியாவும் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. கமல் மற்றும் குழுவினர் ராணுவ உடையில் இருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது. அள்ளுது தலைவா. விரைவில் வாருங்கள் காத்திருக்கிறோம் என ஒரு ரசிகர் கமெண்ட் போட்டுள்ளார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் விஷாலை நிறுத்துவார் கமல் என்று கூறப்பட்டது. இந்நிலையில் விஷால் சுயேட்சையாக நிற்கப் போவதாக தகவல் கசிந்துள்ளது. கமல் தேர்தல் பற்றி அறிவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் விஸ்வரூபம் 2 புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


Kamal Haasan and his Vishwaroopam 2 team in army uniform is the talk of social media. Vishwaroopam 2 photo released by Kamal Haasan has gone viral. Fans are happy to see Kamal in army uniform.